PAK vs AUS, 1st Test (Day 2 Lunch): இமாம், அசார் அபாரம்; மெகா இலக்கை நோக்கி பாகிஸ்தான்!

PAK vs AUS, 1st Test (Day 2 Lunch): Imam-ul-Haq and Azhar Ali stands at 197* at Lunch
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ராவல்பிண்டியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 245 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் 132 ரன்களுடனும், அசார் அலி 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் - அசார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இதில் இமாம் உல் ஹக் 150 ரன்களைக் கடந்தார். மறுமுனையில் அசார் அலி சதத்தை நெருங்கி வருகிறார். இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 302 ரன்களைச் சேர்த்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News