வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் முறையாக வங்கதேச அணியுடன் டி20 போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் - முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா (கே), முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அஹ்மத், முஸ்தபிசூர் ரஹ்மான்.
நியூசிலாந்து - ரச்சின் ரவீந்திரா, டாம் ப்ளண்டெல், வில் யங், கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் (கே), ஹென்றி நிக்கோல்ஸ், கோல் மெக்கன்சி, டக் பிரேஸ்வெல், அஜாஸ் பட்டேல், ஹமிஷ் பென்னெட், பென் செர்ஸ்.