இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 191 ரன்களிலேயே முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின் இன்று நடைபெற்று வரும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கிரேக் ஓவர் 1 ரன்னிலும், டேவிட் மாலன் 31 ரன்னிலும் அடுத்தடுத்து உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஒல்லி போப் - ஜானி பேர்ஸ்டோவ் இணை நிதான அட்டத்தை வெளிப்படுத்தியது. பின் பேர்ஸ்டோவ் 37 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த போப் அரைசதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடியா மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் 36 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி போப் 74 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.