
உலகெங்கிலும் டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஐபிஎல் டி20 லீக் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஆஸ்திரேலியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பிக் பேஷ் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 13ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், உஸ்மான் கவாஜா தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரிஸ்பேனிலுள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மெல்போர்ன் ஸ்டார்ஸ்: தாமஸ் ரோஜர்ஸ், சாம் ஹார்பர், ஜோ பர்ன்ஸ், கிளென் மேக்ஸ்வெல்(கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட், லியாம் டாசன், உசாமா மிர், ஜோயல் பாரிஸ், நாதன் கூல்டர்-நைல், ஒல்லி ஸ்டோன்.
பிரிஸ்பேன் ஹீட்: காலின் முன்ரோ, உஸ்மான் கவாஜா(கே), மார்னஸ் லாபுஷாக்னே, சாம் பில்லிங்ஸ், மேக்ஸ் பிரையன்ட், பால் வால்டர், மைக்கேல் நேசர், சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ குஹ்னேமன்