சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!

சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக ரக்கீம் கார்ன்வால், அலிக் அதானாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து கிளார்க் 18 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News