
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக தன்வீர் சங்கா மற்றும் கூப்பர் கன்னொலி ஆகியோருக்கு வாய்ப்பு வாழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் இன்றி அதே பிளேயிங் லெவனுடன் விளையாடுகிறது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணியும் தோல்வியைச் சந்திக்காமல் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, தன்வீர் சங்கா
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி