ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 6 சுற்றின் 2ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பெலவாயோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நெதர்லாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளது. இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ரியான் க்ளீன், ஆர்யன் தத்.
இலங்கை: பதும் நிஷங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்க.