ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மந்தனா, ஷஃபாலி முன்னேற்றம்!

Deepti Sharma & Shafali Verma Rise In ICC Women's ODI Player Rankings
ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.
ஸ்மிருதி மந்தனா 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 94 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்துவரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷஃபாலி வர்மா 71 ரன்களை அடித்ததன் மூலம் 36ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்குமுன் 43வது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் 10 இடங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News