ஐபிஎல் தொடரில் இன்று வான்கடேவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ர டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் அறிமுக வீரராக விளையாடுகிறார். அதேபோல் ஆர்சிபி அணியின் ஹர்ஷல் படேல் மீண்டும் இணைந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(கே), ரோவ்மன் பாவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது