ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்த சீசனில் ஒரு வெற்றியைக் கூட சந்திக்காமல் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் ஃபாபியன் ஆலன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் கிருஷ்ணப்பா கவுதமிற்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னாய்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ்.