ஹைலைட்ஸ்: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 191 ரன்களிலும், இங்கிலாந்து 290 ரன்களிலும் ஆல் அவுட்டானது. இருப்பினும் இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 466 ரன்களை…
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 191 ரன்களிலும், இங்கிலாந்து 290 ரன்களிலும் ஆல் அவுட்டானது. இருப்பினும் இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 466 ரன்களை குவித்ததுடன், இங்கிலாந்திற்கு 368 ரன்களை இழக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 210 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.