
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 02) நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஷர்தூல் தாக்கூர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
England Playing XI : ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.
India Playing XI : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.