இந்திய அணி கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 5ஆவது போட்டி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ரத்து செய்யப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இந்தியா: சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா(கே).
இங்கிலாந்து : அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ்(கே), சாம் பில்லிங்ஸ், மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.