இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5ஆவது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது.
டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி - டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதன் முதல் பயிற்சி ஆட்டம் இன்றும், கடைசிப் பயிற்சி ஆட்டம் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரு டி20 பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இன்று நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இந்திய வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், தினேஷ் கார்த்திக்(கே), அக்ஸர் படேல்,ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
டெர்பிஷையர் : ஷான் மசூத் (கே), லூயிஸ் ரீஸ், வெய்ன் மேட்சன், லியூஸ் டு ப்ளூய், ப்ரூக் கெஸ்ட் , மேட்டி மெக்கீர்னன், அலெக்ஸ் ஹியூஸ், பென் ஐட்சிசன், மார்க் வாட், ஜார்ஜ் ஸ்க்ரிம்ஷா, ஹில்டன் கார்ட்ரைட்