இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டனாக மொயீன் அலி நியமனம்!

Eng vs Ind: Hosts name Moeen Ali as vice-captain for 4th Test
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த ஜோஸ் பட்லர், குழந்தை பிறப்பு காரணமாக இந்தியாவுடனான கடைசி இரு டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து 4ஆவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.
தற்போது 34 வயதாகும் மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக 63 டெஸ்டுகளில் விளையாடி 2,879 ரன்களும் 193 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News