அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பர்னி (கே), ஜார்ஜ் டாக்ரெல், வில்லியம் மெக்ளின்டாக், ஷேன் கெட்கேட், நீல் ராக், சிமி சிங், மார்க் அதிர், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் வைட்
ஜிம்பாப்வே : வெஸ்லி மாதேவரே, தடிவனாஷே மருமணி, ரெஜிஸ் சாகப்வா, டியோன் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜோங்வே, வெலிங்டன் மசகட்ஸா, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ந்கராவா.