தொடக்க வீரராக புதிய மைல்கல்லை எட்டிய ஹிட்மேன்!

ENG vs IND: Rohit Sharma Gets to 11,000 International Runs as Opener
இந்திய அணியின் ரோஹித் சர்மா தொடக்க வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்,
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்த ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார். அவர் இதனை 246 இன்னிங்ஸில் எட்டியுள்ளார்.
இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்த தொடக்க வீரர்கள் வரிசையில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 241 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News