தென் ஆப்பிரிக்க - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
மேலும் இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக வீரராக ஜார்ஜ் லிண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுக, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா (கே), வாநிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா, பிரவின் ஜெயவிக்ரமா.
தென் ஆப்பிரிக்கா - ஜென்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான்டெர் டூசன், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், ஆண்டிலே பெஹ்லுக்வயோ, கேசவ் மகராஜ்(கே), ஜார்ஜ் லிண்டே, தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா.