இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காண்டெர்பெரியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இந்திய மகளிர்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர்(கே), தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஜூலன் கோஸ்வாமி, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.
இங்கிலாந்து மகளிர்: எம்மா லாம்ப், டாமி பியூமண்ட், சோபியா டன்க்லி, ஆலிஸ் கேப்ஸி, டேனியல் வியாட், ஆமி ஜோன்ஸ்(கே), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், கேட் கிராஸ், லாரன் பெல்.