இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி ஷஃபாலி வர்மாவின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 48 ரன்களை எடுத்திருந்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சு திறனால், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி..!