ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!

Former England Player Jonathan Trott Appointed As Afghanistan's Head Coach
தற்போது 41 வயதாகும் ஜானதன் டிராட் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிவர். இவர் 2018இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஸ்காட்லாந்து அணிக்கு 2021 டி20 போட்டிகளுக்கு பேட்டிங் குறித்து ஆலோசனை வழங்குபவராக பணிபுரிந்தார்.
இந்நிலையில் தற்போது ஆஃப்கானிஸ்தன் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆனது குறித்து டிராட் கூறியதாவது, “ஒரு கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி கடந்த சில வருடங்களாக ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்பதற்காக நான் பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் மக்கள் பெருமைப்படும் வகையில் அணியினை வழிநடத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News