இரானி கோப்பை : ஹனுமா விஹாரி தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிப்பு!

Hanuma Vihari Set To Lead Rest Of India Team Against Ranji Champions Saurashtra In Irani Cup
இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட்டில் அக்டோபர் 1 முதல் 5 தேதிகளில் நடைபெறவுள்ள இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ஹனுமா விஹாரி தலைமையிலான அணியில் துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த ஜெயிஸ்வால், மயங்க் அகர்வால், யாஷ் துல், 150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி :அபிமன்யு ஈஸ்வரன், பிரியங் பாஞ்சல், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி (கேப்டன்), சர்ப்ராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், குல்தீப் சென், உம்ரான் மாலிக், சவுரம் குமார், முகேஷ் குமார், அர்சன் நக்வாஸ்வல்லா, ஜெயந்த் யாதவ்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News