PAK vs ENG, 4th T20I: டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து பந்துவீச்சு!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 வெற்றியைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஷான் மசூத், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஆசிப் அலி, உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், முகமது வாசிம் ஜூனியர்
இங்கிலாந்து: அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயீன் அலி(கே), டேவிட் வில்லி, லியாம் டாசன், அடில் ரஷித், ஒல்லி ஸ்டோன், ரீஸ் டாப்லி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News