SL vs AUS, 3rd ODI: ஹசரங்கா விளையாடுவது சந்தேகம்?

Hasaranga's Injury A Major Concern For Sri Lankan Camp Ahead Of Third ODI Against Australia
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் இன்று 3வது போட்டியை பிரேமதேச ஸ்டேடியத்தில் விளையாட இருக்கிறது. தற்போது 1-1 என்ற நிலையில் தொடர் சமநிலையில் உள்ளதால் இப்போட்டி முக்கியாமானதாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் வீரர்களும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வரும் நிலையில் இலங்கை வீரரும் விலகுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம். “கடந்த போட்டியில் பீல்டிங்கின் போது வனிந்து ஹசரங்காவுக்கு தொடையில் சதைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் எங்களது மருத்துவ குழுவின் மேற்பார்வையில் இருக்கிறார். தினமும் மருத்துவக்குழு வீரர்களது பிட்னசஸ் குறித்து தகவளை அளித்து வருகிறது. ஒருநாள் தொடர் முழுவதும் ஹசரங்கா விளையாடுவார்” என தெரிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News