கிரிக்கெட் ஜாம்பவானை நேரில் சந்தித்த பதக்க மங்கை!

His words of wisdom and motivation shall always stay with me: Mirabai Chanu after meeting Tendulkar
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார்.
இந்நிலையில், பதக்கம் வென்ற மீராபாய் சானு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பு குறித்து மீராபாய் சானு தனது டுவிட்டர் பக்கத்தில் “இன்று காலையில் சச்சின் அவர்களை நான் சந்தித்தேன். ஊக்கமும், ஞானமும் நிறைந்த அவரின் வார்த்தைகள் என்றும் என்னுடன் நிறைந்திருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மீராபாய் சானுவின் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News