
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் துஷ்மந்தா சமீராவும், ஆஃப்கானிஸ்தான் அணியில் ஃபசல்ஹக் ஃபரூக்கியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹா
இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீரா, டில்ஷான் மதுஷங்க.