
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் இலங்கையை பெங்களூருவில் சந்திக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜொஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், மார்க் வுட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை: பதும் நிஷங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், மார்க் வுட்.