
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.
இதில் இன்று லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றங்களை செய்துள்ளன.
நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடவுட், காலின் அக்கர்மேன், சிப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.