
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் இடங்களுக்கு தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி, டிரென்ட் போல்ட்
பாகிஸ்தான் : அப்துல்லா ஷஃபீக், ஃபகார் ஸமான், பாபர் ஆசாம்(கே), முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சவுத் ஷகீல், ஆகா சல்மான், ஷஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.