
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவருகிறது. இதில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டான் டெம்பா பவுமாக விளையாடவில்லை.
அதேசமயம் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்த போட்டியில் மீண்டும் அணியை வழிநடத்துகிறார்.
வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(கே), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்றிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாத் வில்லியம்ஸ்.