இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. போட்டி தொடங்கும் முன் ஈரப்பதம் காரணமாக போட்டியின் டாஸ் நிகழ்வு 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இப்போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு, டாஸ் போடப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவுசெய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச்(கே), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், டேனியல் சாம்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
இந்தியா : கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்., ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.