இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியை இந்திய ஆணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணி ரிஷப் பந்திற்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச்(கே), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ வேட், டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.