இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இரண்டு போட்டிகளிலும் மூன்று நாட்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று மார்ச் 1ஆம் தேதி (இன்று) நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றியுள்ளனர். அதன்படி இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் ஆகியோர் பிளேயிங் லெனிற்கு திரும்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித்(கே), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், டாட் மர்பி, மேத்யூ குஹ்னேமன்
இந்தியா: ரோஹித் ஷர்மா (கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.