![IND vs ENG, 2nd ODI: England have won the toss and have opted to bat! IND vs ENG, 2nd ODI: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து!](https://img.cricketnmore.com/uploads/2025/02/1st-odi-disappointed-not-to-win-the-game-says-buttler1-lg.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக முதல் போட்டியை தவறவிட்ட விராட் கோலி இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மறுபக்கம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் மார்க் வுட், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து பிலேயிங் லெவன்: பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஆதில் ரஷீத், சபிக் மஹ்மூத்.
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.