இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று (அக்டோபர் 16) தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளார். இப்போட்டிக்கான் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம்(கே), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ்,மேட் ஹென்றி, டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்