இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பெங்களூருவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தற்சமயம் தாமதமாகியுள்ளது. மேற்கொண்டு தொடர் மழை காரணமாக மைதானம் முழுவது கவர் செய்யப்பட்டுள்ளன. இதனால் போட்டி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதனால் மழை நின்ற பிறகு தான் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்