இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முகமது சிராஜுக்கு பதிலாக ஹர்சல் படேல் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அதேசமயம் நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோர் களமிறங்குகின்றன.
இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்சல் படேல்.
நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி(கே), இஷ் சோதி, ஆடம் மில்னே, ட்ரெண்ட் போல்ட்.