இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இதையடுத்து இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு பதிலாக துணைக் கேப்டன் கேஎல் ராகுல் அணியின் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார்.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீரன் பொல்லார்டிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஓடியன் ஸ்மித் அணியில் இணைந்துள்ளார்.
இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(கே), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ஓடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், கெமர் ரோச்