IND vs WI, 3rd ODI: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!

India have won the toss and have opted to bat
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், யுஸ்வேந்தி சஹால், தீபக் ஹூடா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிராண்டன் கிங், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(கே), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், ஹேடன் வால்ஷ், கெமர் ரோச்
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News