ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்டிங், விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டர்களுக்கான முதற்கட்ட ஏலம் முடிந்துள்ள நிலையில் வேகப்பந்துவிச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக தீபக் சஹாரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
1) தீபக் சாஹர் - சென்னை சூப்பர் கிங்ஸ், 14 கோடி ரூபாய்
2) லாக்கி பெர்குசன் - குஜராத் டைட்டன்ஸ், 10 கோடி ரூபாய்
3) ஜோஷ் ஹேசில்வுட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 7.75 கோடி ரூபய்
4) பிரசித் கிருஷ்ணா - ராஜஸ்தான் ராயல்ஸ், 10 கோடி ரூபாய்
5) புவனேஷ்வர் குமார் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4.2 கோடி ரூபாய்
6) டி நடராஜன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4 கோடி ரூபாய்
7) முஸ்தாபிசுர் ரஹ்மான் - டெல்லி கேபிடல்ஸ், 2 கோடி ரூபாய்
8) ஷர்துல் தாக்கூர் - டெல்லி கேபிடல்ஸ், 10.75 கோடி ரூபாய்
9) மார்க் வூட் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 7.5 கோடி ரூபாய்
10) உமேஷ் யாதவ் - ஏலம் போகவில்லை