இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துமுடிந்த 2 போட்டியிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி(கே), பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், நிக்கோலா கேரி, அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர்(கே), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாக்கூர் சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட்.