இறுதி ஆட்டத்தில் நடுவராக இந்திய பெண் நியமனம்

India's GS Lakshmi is match referee for Women's World Cup final
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இறுதி ஆட்டத்துக்கான போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர்கள் குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமை ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமிக்கு உண்டு. ஏற்கனவே ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் இதே பணியை செய்திருக்கிறார்.
லாரன் ஆகென்பேக் (தென்ஆப்பிரிக்கா), கிம் காட்டன் (நியூசிலாந்து) கள நடுவர்களாகவும், ஜாக்யூலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) தொலைக்காட்சி நடுவராகவும் செயல்பட உள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News