ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தற்போது நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடுகின்றன. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குல்டர் நைலுக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ்/ரிலே மெரிடித், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.
ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின்,யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி.