அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று (ஜனவரி 12) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இதில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம், அயர்லாந்து அணி இப்போட்டியை வென்று தொடரை சமன்செய்ய முயற்சி செய்யும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அயர்லாந்து மகளிர் பிளேயிங் லெவன்: சாரா ஃபோர்ப்ஸ், கேபி லூயிஸ் (கேப்டன்), ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லாரா டெலானி, லியா பால், கூல்டர் ரெய்லி ஆர்லீன் கெல்லி, அவா கேனிங், ஜார்ஜினா டெம்ப்சே, ஃப்ரேயா சார்ஜென்ட், அலானா டால்செல்
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தேஜல் ஹசாப்னிஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, சாயாலி சத்காரே, சைமா தாக்கூர், பிரியா மிஸ்ரா, டைட்டாஸ் சாது