தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஆஷா சோபனா.
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி: லாரா வோல்வார்ட்(கே), டஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிஸான் கேப், நாதின் டி கிளர்க், நோண்டுமிசோ ஷங்கேஸ், மைக்கே டி ரிடர், மசபாடா கிளாஸ், நோன்குலுலுகோ மலாபா, அயபோங்கா காக்கா.