இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொட்ரின் முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீராங்கனை உமா சேத்ரி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த அதிர்ச்சி தோல்வியில் இருக்கும் இந்திய மகளிர் அணியானது அதிலிருந்து மீள்வதுடன், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்துன் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர்(கே), தீப்தி ஷர்மா, உமா செத்ரி, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, எஸ் சஜனா, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ்
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி: லாரா வோல்வார்ட்(கே), தஸ்மின் பிரிட்ஸ், மரிஸான் கேப், க்ளோ ட்ரையோன், நாதின் டி க்ளெர்க், அன்னேக் போஷ், அன்னேரி டெர்க்சன், எலிஸ்-மேரி மார்க்ஸ், சினாலோ ஜஃப்டா, அயபோங்கா காகா, நோன்குலுலேகோ மலாபா.