TNPL 2024: ஹரிஹரன், ராஜகோபால் அரைசதம்; சூப்பர் கில்லீஸை வீழ்தியது ராயல் கிங்ஸ்!

TNPL 2024: ஹரிஹரன், ராஜகோபால் அரைசதம்; சூப்பர் கில்லீஸை வீழ்தியது ராயல் கிங்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஜெகதீசன் - சந்தோஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News