இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் வடக்கு மற்றும் தெற்கு மண்டல அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி சேலத்திலுள்ள சேலம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தெற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து முதல் இன்னிங்ஸ்லில் 630 ரன்களில் டிக்ளர் செய்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வடக்கு மண்டல அணி 207 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் வடக்கு மண்டல அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளதால், நடப்பு சீசன் துலீப் கோப்பை தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
முன்னதாக இந்திய டெஸ்ட் அணி மற்றும் இங்கிலாந்தின் கெண்ட் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த நவ்தீப் சைனி காயமடைந்துள்ளது அவரது கெரியரை பாதிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.