தென்ஆப்பிரிக்க தொடரிலிருந்து பாக். நட்சத்திர வீரர் விலகல்!

Injured Shadab Khan to miss remainder of South Africa tour
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் ஷதாப் கான். இவர் நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்து ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷதாப் கானிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் ஷதாப் கான் நான்கு வார காலங்கள் ஓய்விலிருக்க வேண்டியது அவசியம் என்பதால், தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News