இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருக்கு கரோனா உறுதி

Ex-India wicket-keeper Kiran More tests positive
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகியுமாக திகழ்பவர் கிரண் மோரே.
இவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையின் முடிவில், கிரண் மோரேவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மும்பை இந்தியன்ஸ் அணி உறுதிசெய்துள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவ குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News